கேரளாவின் இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-07 09:29 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இதுவரை அங்கு 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் நேற்று 2,382.53 அடியாக உயர்ந்தது. மேலும் மழை தொடர்ந்தால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள நீர்வளத்துறை மந்திரி அகஸ்டின் தெரிவித்தார்.

இதையடுத்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், இடுக்கி அணையின் கரையோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இடுக்கி அணையின் 3-வது ஷட்டர் வழியாக 70 செண்டி மீட்டர் மதகு உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்