கேரளா: பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது

பாலக்காடு அருகே பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-15 06:37 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அம்பலப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 37). இவர் அங்குள்ள ஒரு கட்சியின் கிளை செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த வாரம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறைக்குச் சென்று அதை ரகசியமாக செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார்.

அப்போது திடீரென செல்போனில் அழைப்பு வந்ததால் சத்தம் வந்ததை அடுத்து ஷாஜகான் தனது செல்போனை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். செல்போன் சத்தம் கேட்டு திரும்பிய அந்த இளம்பெண் செல்போனை மீட்டு பார்த்ததில் அவர் குளித்துக் கொண்டிருந்தது வீடியோவாக பதிவாகி இருப்பது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது தொடர்பாக பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தனது மீது புகார் பதிவாகி உள்ளது என தெரிந்த ஷாஜகான் தலைமறைவானார். இதையறிந்த கட்சி தலைமை ஷாஜகானை கட்சியிலிருந்து நீக்கியது.

தொடர்ந்து பாலக்காடு போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஷாஜகான் தமிழ் நாட்டில் பதுங்கி இருப்பதாக பாலக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர் பதுங்கி இருந்த இடத்திற்கு விரைந்து வந்து ஷாஜகானை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்