கேரளா: சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கச்சேரிபடி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதைக் கண்ட அந்த காரின் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியத்தோடு, அந்த காரில் பயணம் செய்த 3 பேரும் அதில் இருந்து வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த கார் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அந்த காரில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணமும், உரிமையாளரின் நிலப்பத்திரங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.