நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் பெருமிதம்
நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்வதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
கொச்சியில் கேரள காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. அதே சமயத்தில் ஊழலில் இருந்து முற்றிலும் விடுபட்டது என்று சொல்ல முடியாது. காலத்தால் மாற்ற முடியாத சில தவறுகள் சேவைகளில் உள்ளன. எல்லா பணியிடங்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களை நாங்கள் எந்த வகையிலும் சகித்துக் கொள்ள மாட்டோம். அத்தகைய தவறுகள் செய்வதவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றார்.