கேரளா:தொகுதி மாற்றி போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள்

மலப்புரம் தொகுதியில் போட்டியிடும் அப்து சமத் சமதானி என்பவர் சிறந்த மேடை பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார்.;

Update: 2024-02-28 10:58 GMT

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சிமேலிடம் அறிவித்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் 2 இடங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி அக்கட்சிக்கு பொன்னானி, மலப்புரம் ஆகிய தொகுதிகள் கிடைத்து உள்ளன.

இங்கு போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் பானக்காடு சாதிக் அலி சிக்காப் தங்கள் அதிகார பூர்வமாக வெளியிட்டார்.

இதன்படி பொன்னானி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய மலப்புரம் எம்.பி. ஆன அப்துல் சமத் சமதானியும், மலப்புரம் தொகுதியில் தற்போதைய பொன்னானி எம்.பி. யான ஈ.டி. முகமது பஷீரும் போட்டியிடுகின்றனர். இம்முறை இவர்கள் இருவரும் தங்களது தொகுதிகளை மாற்றிக்கொண்டு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

77 வயதான முகமது பஷீர் இதற்கு முன்பு 2009 , 2014 , 2019 ஆகிய மூன்று முறையும் பொன்னானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.மேலும் இவர் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். மலப்புரம் தொகுதியில் போட்டியிடும் அப்து சமத் சமதானி, சிறந்த மேடைப் பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்