கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் உடல்நல குறைவால் பதவி விலகல்

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரான கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நல குறைவால் பதவி விலகியுள்ளார்.;

Update: 2022-08-28 08:03 GMT



புதுடெல்லி,



கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருபவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இவர் உடல்நிலையை காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்து உள்ளார்.

கட்சியின் பழம்பெரும் தலைவரான அவர், தனது முடிவை பற்றி கட்சி தலைமைக்கு நேற்று தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, இதுபற்றி ஆலோசிக்க அக்கட்சியின் அவசர கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், கட்சியின் பிற மூத்த தலைவர்களான சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் காரத் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நல பாதிப்புகளை சுட்டி காட்டி விலகியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த பதவியில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு பதிலாக ஏ. விஜயராகவன் என்பவர் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பினை வகித்து வந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்