சபரிமலை அரவணை ஏலக்காயின் தரம் குறித்து மற்றொரு முறை ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவு

கொச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் ஏலக்காயின் தரத்தை மற்றொரு முறை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.;

Update: 2023-01-10 09:15 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவின்பேரில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பசிசோதனை செய்து அறிக்கை சமப்ர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் அரவணை ஏலக்காய் தரமற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால் ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏலக்காயின் தரம் குறித்து மற்றொரு முறை ஆய்வு செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் கோர்ட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த நீதிபதிகள் கொச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் ஏலக்காயின் தரத்தை மற்றொரு முறை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.


Full View

  

Tags:    

மேலும் செய்திகள்