கேரளா: பெண் டாக்டர் கொலைக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்.. டிஜிபி விளக்கமளிக்க உத்தரவு

இளம்பெண் பயிற்சி டாக்டர் வந்தனாதாஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-11 01:16 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் பயிற்சி டாக்டர் வந்தனாதாஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், கவுசர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் சிறப்பு அமர்வு கூடி விசாரித்தது. இதில் நீதிபதிகள் கூறியதாவது:-

நாட்டில் வேறு எங்கும் நடைபெறாத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் அரசு ஆஸ்பத்திரிகளை மூடி விடுங்கள். பாதுகாப்புக்கு சென்ற போலீசாரின் கையில் துப்பாக்கி இல்லையா?.

இந்த சம்பவம் தொடர்பாக நாளை (அதாவது இன்று) மாநில டி.ஜி.பி. கோர்ட்டில் விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் கொட்டாரக்கரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கொலை சம்பவம் நடந்த கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவம் நடந்த போது போலீசார் அந்த இடத்தில் இருந்த போதும், அதனை தடுக்க முடியவில்லையா?. போலீசார் நினைத்திருந்தால் டாக்டரை காப்பாற்றி இருக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணை இன்றும் நடைபெறுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்