தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 17 வயது சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி..!!

கேரளாவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய 17 வயது சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.;

Update: 2022-12-22 19:10 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர் அப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் உறுதியாக கூறிவிட்டனர்.

இதையடுத்து உடல் உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் பதிவு செய்து காத்திருந்தனர். ஆனால் அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. எனவே அவரது 17 வயது மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். ஆனால் மருத்துவ சட்ட விதிகளின் படி மைனர் பெண்கள் தங்களது உறுப்புகளை தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள் 17 வயது சிறுமியின் கல்லீரலை தானமாக பெற மறுத்தனர்.

கோர்ட்டு அனுமதி

இதையடுத்து அந்த சிறுமி, கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு, சிறுமி அவரது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது. அத்துடன் தானம் செய்ய முன்வந்த சிறுமியை கோர்ட்டு வெகுவாக பாராட்டியது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை சுட்டிக்காட்டியது. அதில், இதுபோன்ற மகளை பெற்ற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்