சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி 9 துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கேரள கவர்னர் 'கெடு'

கேரள மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

Update: 2022-10-23 20:49 GMT

திருவனந்தபுரம், 

கேரள மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்து, கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளுக்கு புறம்பாக நியமனம் நடந்ததாக கூறியுள்ளது.

இந்தநிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்குள், அவர்களின் ராஜினாமா கடிதங்கள் தனக்கு வந்துசேர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்