"முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு" - நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின்

முல்லைப்பெரியாற்றில் கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு என்று கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-21 01:30 GMT

தேனி,

முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் முகநூல் பதிவில்,

"முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு". அணையில் 136 அடி நீர்மட்டம் என்பது கேரளாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், 142 அடி என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு. கேரளாவுக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதே கேரளாவின் இலக்கு. தற்போது உள்ள அணைக்கு கீழ் பகுதியில் 1,300 அடி தொலைவில் புதிய அணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதும் நமக்கு சாதகமாகவே உள்ளது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் சாத்தியமான அனைத்தையும் மாநில அரசு செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்