கேரளா: அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட நாகப்பாம்பு குட்டிகளைப் பிடித்த தீயணைப்புத்துறையினர்
நாகப்பாம்பு குட்டிகளைப் பிடித்த தீயணைப்புத்துறையினர் அவற்றை பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்ட்டில் நாகப்பாம்பு குட்டிகளைப் பார்த்த நோயாளிகள், அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 10-க்கும் மேற்பட்ட நாகப்பாம்பு குட்டிகளைப் பிடித்தனர். பின்னர் அவைகளை சிறு குடுவைகளில் அடைத்து பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.