கேரளாவில் 10,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-11-24 10:38 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2023-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. மேலும் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ந்தேதி தொடங்கி மார்ச் 3-ந்தேதி முடிவடைகிறது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கும் என்றும் மே 10-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கேரள பொதுக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் 2023-ம் ஆண்டு மார்ச் 10-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி முடிவடைகிறது. மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ந்தேதி தொடங்கி மார்ச் 3-ந்தேதி முடிவடைகிறது. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. மேலும் பன்னிரண்டாம் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி 25-ந்தேதி தொடங்குகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கும் என்றும் தேர்வு முடிவுகள் மே 25-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்