கேரள டாக்டர் கொலை வழக்கு: கைதான ஆசிரியர் சந்தீப் பணிநீக்கம் - மாநில கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் சந்தீப்பை பணி நீக்கம் செய்து கேரள மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-06 15:55 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொட்டரக்கரா தாலுகா மருத்துவமனையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட சந்தீப் என்ற நபர், அங்கு பணியில் இருந்த டாக்டர் வந்தனா தாஸ் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

சந்தீப் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி சந்தீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர் சந்தீப்பை பணி நீக்கம் செய்து கேரள மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சந்தீப்பின் செயல் ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்