"மாநில அரசை நிதி ரீதியாகப் பிளவுப்படுத்தி ஒழிக்க முயற்சி" மத்திய அரசு மீது கேரள முதல் மந்திரி குற்றச்சாட்டு

மாநில அரசை நிதி ரீதியாக பிளவுப்படுத்தி ஒழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-08-20 14:50 GMT

கோழிக்கோடு,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய அரசானது மாநில அரசை நிதி ரீதியாக பிளவுபடுத்தி ஒழிக்க முயற்சி செய்வதாக சரமாரியாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

மாநிலங்களின் அதிகாரத்தை அபரித்து வருவதாகவும், அரசியலமைப்பு அமைப்புகளை வலுவிழக்கச் செய்வதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களைப் பிளவுப்படுத்தி, பன்முகத்தன்மையை அழித்து ஒற்றையாட்சியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் விஜயன் கூறினார்.

கிப்பி போன்ற நிறுவனங்கள் மாநிலங்களுக்கு உதவக்கூடாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாநில அரசை நிதி ரீதியில் பிளவுப்படுத்தி, ஒழிக்க முயல்வதாக விமர்சித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்