கேரளா: பெட்ரோல் நிலைய ஊழியரை கட்டிப்போட்டு ரூ.50 ஆயிரம் கொள்ளை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெட்ரோல் நிலைய ஊழியரை கட்டிப்போட்டு ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-06-09 11:18 GMT

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கோட்டுலீ பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் இரவு நேரத்தில் கட்டிடத்தின் மேல் இருந்து இறங்கிய மர்ம ஆசாமி ஒருவர் பணம் வைக்கும் அறைக்குள் நுழைந்தார்.

பின்னர் அங்கிருந்த ஊழியர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தி அவரை கட்டிப்போட்டுவிட்டு அங்குள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், கொள்ளை சம்பவம் பதிவான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்