அவதூறு வழக்குக்கு எதிரான கெஜ்ரிவால் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

அவதூறு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-02-26 04:59 GMT

புதுடெல்லி,

பிரபல யூடியூபர் துருவ் ரதி கடந்த 2018-ம் ஆண்டு டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மறுடுவிட் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த 2019-ம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இதை விசாரித்த ஐகோர்ட்டு, கெஜ்ரிவால் சம்மனை உறுதி செய்தது. எனவே கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். அவதூறு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரிக்கும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்