காஷ்மீர் விவகாரம்; கூட்டாட்சி தத்துவம் என்ன ஆனது? - மக்களவையில் ஆ.ராசா எம்.பி. கேள்வி
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு அரசியல் ஊக்கத்தை வழங்கியிருப்பதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குறிப்பிட்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, ஜம்மு-காஷ்மீர் வழக்கில் சரியோ, தவறோ சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்றார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு அரசியல் ஊக்கத்தை வழங்கியிருப்பதோடு, சட்டரீதியான ஆதரவை வழங்கியிருப்பதாகவும் ஆ.ராசா குறிப்பிட்டார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவமும், ஜனநாயக மதிப்பீடுகளும் என்ன ஆனது என ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.