கர்நாடகத்தில் புதிதாக 171 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இன்று 20 ஆயிரத்து 143 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 161 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 3 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 2 பேருக்கும், சித்ரதுர்கா, உத்தரகன்னடா, தாவணகெரேயில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 121 பேர் குணம் அடைந்தனர். 1,827 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.