கர்நாடகா: போலீஸ் ஸ்டேசனில் அட்டூழியம் செய்த எலிகளுக்கு பயந்து பூனைகளை வளர்க்கும் போலீசார்!

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரிபிதனூர் போலீஸ் ஸ்டேசனில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகளை வளர்க்கும் முடிவை போலீசார் எடுத்துள்ளனர்.

Update: 2022-06-28 14:05 GMT

பெங்களூரு,

வீடுகளில் பூனைகள் வளர்க்கப்படுவது வழக்கம். ஆனால் போலீஸ் ஸ்டேசன் போன்ற அரசு அலுவலகத்தில் பூனை இருப்பது மிகவும் அரிது. இருப்பினும், எலிகளிடமிருந்து தப்பிக்க பூனைகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கர்நாடக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரிபிதனூர் போலீஸ் ஸ்டேசனில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகளை வளர்க்கும் முடிவை போலீசார் எடுத்துள்ளனர். போலீஸ் ஸ்டேசனில் உள்ள ஆவணங்களை எலிகள் நாசம் செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே சமீபத்தில் இரண்டு பூனைகள் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன.

இதனால் எங்கள் பணி சுமூகமாக இருப்பதாக அந்நிலைய காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எலிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்