முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா காங்கிரஸ் அரசு முடிவு

முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Update: 2023-06-15 10:55 GMT

PTI Photo

பெங்களூரு,

முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முந்தைய பாஜக ஆட்சியில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் கர்நாடக சட்டமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மே 17, 2022 அன்று கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். பின்னர் செப்டம்பர் மாதம் நடைமுறையில் இருந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், தற்போது இந்த மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்