மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு என்ஐஏக்கு மாறுகிறது

மங்களூரு ஆட்டோ வெடி விபத்து சம்பவம் தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ-க்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-11-21 08:06 GMT

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையிட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மங்களூருவில் உயர் போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், மங்களூருவில் ஆட்டோ வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்ததில் ஓட்டுனர் புருஷோத்தம் புஜாரி, ஷரிக் ஆகியோர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்