அதிக பெண் எம்.எல்.ஏ.க்களை வரவேற்கும் கர்நாடக சட்டப்பேரவை.!
கர்நாடக தேர்தல் வரலாற்றில் 2-வது அதிக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளனர்.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் 16-வது சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.
இந்த நிலையில், கர்நாடக தேர்தல் வரலாற்றில் 2-வது அதிக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளனர். பாஜகவில் இருந்து 5 பேர், காங்கிரசில் இருந்து 4 பேர் ம.ஜ.த, மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் என மொத்தம் 11 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த 1962-ம் ஆண்டு அதிகபட்சமாக 18 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.