ரூ.5 கோடி மோசடி வழக்கில் கைதான மடாதிபதிக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல்

ரூ.5 கோடி மோசடி வழக்கில் கைதான மடாதிபதிக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல் வழக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-10-03 21:42 GMT

பெங்களூரு:

உடுப்பியை சேர்ந்த தொழில் அதிபரிடம் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்து அமைப்பு பிரமுகர் சைத்ரா, மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ உள்பட 8 பேரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மடாதிபதியை ஒடிசாவில் வைத்து போலீசார் கைது செய்து இருந்தனர். இதற்கிடையே அவர்கள் அனைவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ, கதக் மாவட்டம் முண்டரகி தாலுகாவை சேர்ந்த சஞ்சய் என்பவரிடமும் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

இதுதொடர்பாக மடாதிபதியை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மடாதிபதியை பெங்களூரு போலீசார், முண்டரகிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பெங்களூருவுக்கு திருப்பி அழைத்து வந்த நிலையில், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்