கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-06-02 21:22 GMT

Image Courtacy: ANI

பெங்களுரு,

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் இருந்தாலும், சில மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 2,745 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 3,712 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "தொற்றுநோயின் 3 அலைகள் மூலம் பாதிக்கப்படாத நிலையில், தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு மிதமான அறிகுறிகள் உள்ளன, மேலும் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.

ஏற்கனவே நான் முழுமையாக தடுப்பூசி எடுத்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டுள்ள எவரும், தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று மந்திரி சுதாகர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்