மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக டுவிட்டர் தொடர்ந்த வழக்கு: கர்நாடக ஐகோர்ட் அபராதத்துடன் தள்ளுபடி

ஒரு சில டுவிட்கள் மற்றும் டுவிட்டர் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

Update: 2023-06-30 10:42 GMT

பெங்களூரு,

ஒரு சில டுவிட்கள் மற்றும் டுவிட்டர் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடரப்பட்ட இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. அதோடு, அரசின் உத்தரவை பின்பற்றாத டுவிட்டருக்கு 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது .

சமூக வலைதளங்களில் கருத்துகளை, பதிவுகளை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அபராதத் தொகையை 45 நாட்களுக்கு செலுத்தவும் வேண்டும் எனவும் தவறினால் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராத தொகையில் கூடும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்