கர்நாடகா பொன்விழா: அனைத்து போலீசாருக்கும் வெள்ளி பதக்கங்கள்; சித்தராமையா அறிவிப்பு

பெங்களூருவில் 8 கூடுதல் டி.சி.பி.க்கள் உருவாக்கப்படுவார்கள். சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்பட வேண்டும்.

Update: 2024-01-16 15:45 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடந்த மூத்த காவல் அதிகாரிகளின் ஆண்டு மாநாட்டில் காங்கிரசை சேர்ந்த, கர்நாடக முதல்-மந்திரியான சித்தராமையா இன்று கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, நம்முடைய மாநிலத்திற்கு கர்நாடகா என பெயர் சூட்டியதன் பொன்விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். முன்பு மைசூர் போலீசார் என அழைக்கப்பட்டு வந்த மாநில போலீசார் கூட கர்நாடக போலீசார் என்ற பெயரை பெற்றனர். இது கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார்.

நம்முடைய மாநிலத்திற்கு கர்நாடகா என பெயரிடப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை கொண்டாட அனைத்து போலீசாருக்கும் வெள்ளி பதக்கம் வழங்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

போலீசாரின் மருத்துவ படி (அலவன்ஸ்) தொகையானது மாதம் ஒன்றுக்கு, ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்படும். பெங்களூருவில் 8 கூடுதல் டி.சி.பி.க்கள் உருவாக்கப்படுவார்கள்.

சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்பட வேண்டும். போதையில்லா மாநிலம் ஆக கர்நாடகா உருப்பெற வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு நல்ல நிலையில் காணப்பட்டால், அதனால் நல்ல முதலீடுகளை நாம் ஈர்க்க முடியும். இறுதியாக வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்