கர்நாடக தேர்தல்; ராகுல் காந்தி இன்று பரப்புரை

சட்டமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.;

Update: 2023-04-27 02:47 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல்காந்தி இன்றும், நாளையும் பரப்புரை மேற்கொள்கிறார். அவர் இன்று உடுப்பி மற்றும் மங்களூருவிலும், நாளை கலபுரகி, பெல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்