கர்நாடக தேர்தல் - அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

Update: 2023-04-21 08:25 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புலிகேசி நகரில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அன்பரசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் புலிகேசி நகரில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்பு மனு ஏற்க்கப்பட்டுள்ளது. அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்