கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா வருகிற 20-ந்தேதி பதவியேற்க உள்ளார்.;

Update: 2023-05-18 09:20 GMT

பெங்களூரு,

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரி யார் என்பதில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதற்காக இரு தலைவர்களும் டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கு முன் காங்கிரஸ் மேலிடம் பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இதில் முடிவாக அடுத்த முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா வருகிற 20-ந்தேதி பதவியேற்க உள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவிற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்