கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: கார்கேவுடன் முதல் மந்திரி சித்தராமையா ஆலோசனை
கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுடன் அம்மாநில முதல் மந்திரி சித்தராமையாஆலோசனை நடத்துகிறார்.;
பெங்களூரு,
கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த நிலையில், முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
அமைச்சர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.