கர்நாடக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகலா...? நளின் கட்டீல் மறுப்பு

கர்நாடக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகல் என்ற தகவல் புரளி என நளின் கட்டீல் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2023-06-24 10:13 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க., இந்த தேர்தலில் 66 தொகுதிகளையே கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நளீன் கட்டீல் விலகி உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இது கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தியது. சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, பல்லாரி நகரில் கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த கட்டீல் அதற்கு பொறுப்பேற்று கொள்கிறேன் என கூறினார்.

அக்கட்சியின் மூத்த தலைவரான சோமண்ணாவும் கர்நாடக பா.ஜ.க. தலைவர் பதவியை தனக்கு அளிப்பது பற்றி விருப்பம் வெளியிட்டார். இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் அதுபற்றிய செய்திகள் புரளி என நளின் கட்டீல் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கட்சியின் புதிய தலைவரை நியமிப்பதில், சரியான நேரத்தில் கட்சி சரியான முடிவை எடுக்கும். எனினும், எனது பதவி விலகல் பற்றி நான் எதுவும் கூறவில்லை என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்