கர்நாடக சட்டசபை தேர்தல்; சித்தராமையா, டி.கே. சிவக்குமார் வெற்றி என அறிவிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காங்கிரசின் டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார்.
இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி. சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளார்.
இதன்பின் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இருவரும் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.