கர்நாடகத்தில் புதிதாக 1,736 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,736- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-02 13:47 GMT

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று 25 ஆயிரத்து 753 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,736 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளுது. இதில் பெங்களூரு நகரில் 1,274 பேருக்கும், மைசூருவில் 51 பேருக்கும், பல்லாரியில் 19 பேருக்கும், பெலகாவியில் 45 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 20 பேருக்கும், தார்வாரில் 45 பேருக்கும், ஹாசனில் 49 பேருக்கும், குடகில் 30 பேருக்கும், மண்டியாவில் 18 பேருக்கும், ராய்ச்சூரில் 30 பேருக்கும், சிவமொக்காவில் 18 பேருக்கும், துமகூருவில் 29 பேருக்கும், உத்தரகன்னடாவில் 14 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரே நாளில் 1,699 பேர் குணம் அடைந்தனர். 10 ஆயிரத்து 896 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.74 ஆக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்