கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டம்

மைசூருவில் இன்று கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டத்தில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் பங்கேற்கிறார்.

Update: 2022-10-31 20:49 GMT

மைசூரு:

கா்நாடக தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் மைசூரு மாவட்டத்திலும் இன்று ராஜ்யோத்சவா விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை முன்பு உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் 67-வது கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பெங்களூருவில் இருந்து நேற்று மாலை மைசூரு வந்தார். இந்த நிகழ்ச்சி மைசூரு மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகாகளில் அந்தந்த தாசில்தாா்கள் தமைலையில் நடக்கிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி. சோமசேகர் அரண்மனை வளாகத்தில் உள்ள புவனேஸ்வரி கோவிலுக்கு சென்று அங்கு பூஜை செலுத்துகிறார். அதற்கு பிறகு அவர் 9 மணி அளவில் கன்னட கொடியை ஏற்றி கன்னட நாட்டுக்கு, கன்னட மக்களுக்கு மரியாதை செலுத்துகிறார். பிறகு கன்னட நாடு, மொழி, பண்பாடு, கலாச்சாரங்கள், அரசு சாதனைகளை பற்றி உரையாடுகிறார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, எம்.எல்.ஏ.க்கள் நாகேந்திரா, ராமதாஸ், தன்வீர் சேட், எம்.எல்.சி.களான சி.மஞ்சேகவுடா, டா.திம்மையா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்