மோசடி வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது

மோசடி வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-15 22:09 GMT

பெங்களூரு:

கன்னட திரை உலகில் நடிகர் மற்றும் இயக்குனராக பணியாற்றி வருபவர் வீரேந்திர பாபு. இவர் தற்போது ராஷ்டிர ஜன்ஹிதா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் ராஷ்டிர ஜன்ஹிதா கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட சீட் கொடுப்பதாக கூறி வீரேந்திர பாபு பலரிடம் பணம் வசூலித்து உள்ளார். மேலும் கட்சியின் மாவட்ட மற்றும் தாலுகா தலைவர் பதவி வழங்குவதாக பலரிடம் வீரேந்திர பாபு பணம் வசூலித்து உள்ளார். ஆனால் கூறியபடி மாவட்ட, தாலுகா தலைவர் பதவி வழங்காமல் ரூ.1.88 கோடி மோசடி செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வீரேந்திர பாபுவிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த பசவராஜ் சோனல் என்பவர் பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரேந்திர பாபுவை கைது செய்து உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை மையமாக கொண்டு ஒரு நிறுவனம் தொடங்கி விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தேவனஹள்ளி போலீசாரால் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்