சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலும் இரு நீதிபதிகள் நியமனம் - மத்திய அரசு உத்தரவு

புதிதாக இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

Update: 2023-02-10 23:12 GMT

புதுடெல்லி,

அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆக இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி இடங்கள் எண்ணிக்கை 34. தற்போது பணியில் 32 பேர் உள்ளனர். புதிதாக இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்