தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்
கொல்கத்தை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், கடந்த ஜூலை 6-ந்தேதி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பொறுப்பு தலைவராக நீதிபதி ஷியோ குமார் சிங் கடந்த ஜூலை 7-ந்தேதி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, கடந்த மார்ச் 30-ந்தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.