நீதி வழங்கப்பட்டுள்ளது, ஜனநாயகம் வென்றுள்ளது - மல்லிகார்ஜுன கார்கே
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது குறித்து ஜனநாயகம் வென்றுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. வரும் காலங்களில் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் என்ற நிம்மதி ராகுலுக்கு கிடைத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
உண்மை மட்டுமே வெல்லும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உண்மைக்கு கிடைத்த வெற்றி. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். நீதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் வென்றுள்ளது. அரசியலமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. பாஜகவின் சதி வேட்டையாடுவது முற்றிலும் அம்பலமானது. எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்கள் தீங்கிழைக்கும் வகையில் குறிவைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.