ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஏ.கே சிங் நியமனம்
ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஏ.கே சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஏ.கே சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி ரவி ரஞ்சன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி ஏ.கே சிங் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்பின் 223-வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி, ரவி ரஞ்சன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து 20.12.2022 முதல் ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஏ.கே சிங்கை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.