பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-09-03 23:12 GMT

ராஞ்சி,

உத்தரகாண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் முபசில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த அர்மன் அன்சாரி என்ற நபரை கைது செய்தனர். கட்டிட தொழிலாளியான அன்சாரி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்மன் அன்சாரியை கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்த பின் மகளை அன்வர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளதாக சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தும்கா மாவட்டத்தில் காதலிக்க மறுத்த 16 வயதான அங்கிதா என்ற சிறுமியை வீட்டில் தூங்கிக்கொண்டிந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஷாருக் ஹசன் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயத்தால் படுகாயமடைந்த அங்கிதா கடந்த 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்

Tags:    

மேலும் செய்திகள்