ஜார்க்கண்ட்: தலைக்கு ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி சரண்

ஜார்க்கண்டில் தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தளபதி போலீசில் இன்று சரண் அடைந்து உள்ளார்.

Update: 2022-12-28 13:27 GMT



ராஞ்சி,


ஜார்க்கண்டில் நக்சலைட்டு அமைப்பின் முக்கிய நபராக மற்றும் மாவோயிஸ்டு மண்டல தளபதியாக இருப்பவர் அமன் கஞ்சு. இவரை பற்றி தகவல் அளிப்போருக்கு அல்லது கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசாரால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஞ்சி நகரில், மத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எப்.) மற்றும் போலீசார் முன் அமன் இன்று சரண் அடைந்து உள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் தீவிரமுடன் செயல்பட்டு வந்த அமன், மாவோயிஸ்டு அமைப்பை விரிவாக்கம் செய்வதிலும், திட்டமிடுவதிலும் மற்றும் அவற்றை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வந்துள்ளார் என சி.ஆர்.பி.எப். தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்