ஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் தலைமையிலான அரசு தப்புமா?- நம்பிக்கை வாக்கெடுப்பு தொடக்கம்

இந்த வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பங்கேற்றுள்ளார்.

Update: 2024-02-05 06:05 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார்.

அதேவேளை, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

அதேவேளை, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.

அதேவேளை, காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்