ஜார்க்கண்ட்: பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து
சத்ரா மாவட்டத்தில் உள்ள பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியில், பெல் (BHEL) நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.