ஜார்கண்ட்: வாய்த்தகராறு முற்றி நாற்காலிகள் வீச்சு...முன்னாள் முதல் மந்திரி, எம்எல்ஏ கோஷ்டி மோதல்
இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி மாறி மாறி தாக்க தொடங்கினர்.;
ஜார்கண்ட்,
பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், சத்பூஜா எனப்படும் சூரிய திருவிழா இந்த பருவகாலத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஜார்க்கண்ட் மாநிலம் சித்கோரா மாவட்டத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் சூரியகோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கிழக்கு ஜாம்ஷெட்பூர் எம்.எல்.ஏ. சர்யூ ராய் ஆதரவாளர்கள் உதவிக் குடில்களை அமைத் திருந்தனர்.
விழா மேடைக்கு முன்பாக அமைக்கப்பட்ட இந்தக் குடில்களுக்கு அருகில், பாஜகவில் உள்ள முன்னாள் முதல் மந்திரி ரகுபர் தாஸ் ஆதரவாளர்கள் ஆடல்பாடலுக்கு ஏற்பாடு செய்தனர்.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி மாறி மாறி தாக்க தொடங்கினர். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஜாம்ஷெட்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.