டிராக்டர் மீது ஜீப் மோதல்; தம்பதி சாவு

விஜயாப்புரா அருகே டிராக்டர் மீது ஜீப் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.

Update: 2022-10-27 18:45 GMT

பெங்களூரு:

விஜயாப்புரா மாவட்டம் இன்டி தாலுகா டோல்கேட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் சென்றது. அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த ஒரு ஜீப், டிராக்டரின் பின்புறம் மோதியது. இதன் காரணமாக டிராக்டரின் பின்பக்க டிராலியில் கரும்புகளுக்கு மேல் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில், சம்பவ இடத்திலேயே பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் யலகி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்த பயாஜி சிந்தே (வயது 50), அவரது மனைவி சுமித்ரா சிந்தே (40) என்று தெரிந்தது. ஜீப்பை டிரைவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்