ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

Update: 2023-03-15 09:48 GMT

புதுடெல்லி,

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த நுழைவுத் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) இரவு 10.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்