ஜம்முவில் கனமழை... நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்

ஜம்முவில் பெய்த கனமழையின் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

Update: 2022-06-23 09:13 GMT

image screengrap for the video by @Traffic_hqrs

ஜம்மு,

ஜம்முவில் பெய்த கனமழையால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உட்பட பல சாலைகள் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டன.சம்ரோலியில் தவால் பாலம் அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலையின் 100 முதல் 125 மீட்டர் பகுதி சேதமடைந்துள்ளது.

மேலும் மோர் சுரங்கப்பாதை மற்றும் பேட்டரி சாஷ்மா அருகே சாலை மூடப்பட்டது. அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நிலச்சரிவின் காரணமாக முற்றிலும் மறைந்துவிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நிலச்சரிவால் சேதமடைந்திருக்கும் சாலைகளை சரிசெய்யும் பணிகளி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்