"இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களாகவே பிறக்கிறார்கள்" - குலாம் நபி ஆசாத்

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களாகவே பிறக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.;

Update: 2023-08-17 06:30 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது கூறியதாவது:-

இஸ்லாம் மதத்தை விட இந்து மதம் பழமையானது. 1,500 ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாம் தோன்றியது. மதமாற்றத்தால் இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களாகவே பிறக்கிறார்கள்.

சில முஸ்லிம்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்திருக்க வேண்டும் என்பது உறுதி. சில முஸ்லிம்கள் முகலாயர்களுக்கு சேவை செய்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து முஸ்லிம்களாக மாறி உள்ளனர்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இஸ்லாத்திற்கு மாறியதற்கான சான்றுகள் உள்ளன.

காஷ்மீரின் முக்கிய மக்கள்தொகை காஷ்மீரி பண்டிட்கள். காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் காஷ்மீரி பண்டிட்டுகளிலிருந்து மதமாற்றம் செய்யப்பட்டனர். இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், ராஜபுத்திரனாக இருந்தாலும், பிராமணனாக இருந்தாலும், தலித் ஆக இருந்தாலும், காஷ்மீரியாக இருந்தாலும், குஜ்ஜராக இருந்தாலும், நாம் அனைவரும் இந்த தாய்நாட்டின் ஒரு பகுதி. எங்களின் வேர்கள் இந்த மண்ணில் உள்ளன.  வாழ்நாள் முடிந்த பின்னரும் இந்த மண்ணுக்குத் திரும்புவோம் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்