ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேரத்தில் மீட்பு

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டான்,;

Update: 2023-05-20 22:28 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள போஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அக்ஷித்.

இவன் நேற்று காலை, ஒரு திறந்தநிலை ஆழ்துளை கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது தடுமாறி அந்த ஆழ்துளை கிணற்றினுள் அவன் விழுந்தான். அதில் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டான்.தகவல் அறிந்ததும் அரசு அதிகாரிகளும், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் நீண்ட மீட்பு போராட்டத்தின்போது சிறுவன் அக்ஷித்துடன் மீட்புப் படையினர் பேசியவாறே இருந்தனர். குழாய் வழியாக அவனுக்கு தண்ணீரும், ஆக்சிஜனும் வழங்கப்பட்டன. பிஸ்கட்டுகளும் கொடுக்கப்பட்டன.

மாநில விவசாய மந்திரி லால்சந்த் கட்டாரியாவும் அங்கு சென்று மீட்புப்பணியை பார்வையிட்டார்.

சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குப் பின் சிறுவன் மீட்கப்பட்டான். ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவனது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்